ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 7 February 2015

சமூகத்தினொரு பாகன்

இன்றைய தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் அமீபாவின் உருவம் போல வரையறுக்கப்படுவது தனிமனித உரிமை எனும் கோட்பாடு. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துத் தன் நலனை என்பதை மட்டுமே யோசித்துப் பேசப்படுவதாகவே தனிமனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் கோட்பாடு உள்ளது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பதில் சமுதாய என்ற சொல்லைப் பலர் வசதியாக மறந்துவிட்டு தனிமனித உரிமை பேசுவது வேடிக்கை.


சிலர் புரியாது செய்கிறார்கள், சிலர் ஒரு உள்நோக்கத்தோடு செய்கிறார்கள், சிலர் இப்படிச் சிந்திக்கப் பயிற்றுவிக்கப்பட்டதால் மாற்றுச் சிந்தனை வழியறியாது இதைச் செய்தபடி தற்குறியாகத் திரிகிறார்கள். இத்தனை நாட்களாக இல்லாத எதிர்ப்பு ஏன் இப்போது என்ற கேள்வி நியாயமானதே. இத்தனை நாட்களாக இருந்த எதிர்ப்பு வெளியே தெரியவரவில்லை. காரணம், ஊடகங்களில் நிரம்பி வழியும் சில உள்நோக்கர்கள், அவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட பலர், மற்றும் சில ஒத்து வாழ்வோர். இவர்களைத் தாண்டி இவர்களுக்கு எதிரான கருத்துக்கள் இவர்கள் நிரம்பியிருக்கும் ஊடகங்களில் வரும் என்று எதிர்பார்ப்பது இந்தி படிக்காமல் இருந்தால் தமிழ் வளரும் என்று நம்புவதைவிட முட்டாள்தனம்.