ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 30 May 2013

அறிவுரை நம்பிகள்

ஒருவன் தான் கற்றது கைமண்ணளவே என்று உணரும் போது அறிவாளியாகிறான். ஆனால் தான் கற்றாது அதிகம் என்று என்று ஒருவன் உணரத் துவங்கும் போது முட்டாளாகிறான். முட்டாள்களிடம் கூட விவாதம் செய்து சில விஷயங்களைப் புரிய வைக்கலாம். ஆனால் அறிவாளி என்று தன் தலைக்குப் பின் தானே ஒளிவட்டம் வரைந்து கொண்டு திரியும் பேர்வழிகளிடம் விவாதிப்பது முடியாது. ஏனென்றால் இவர்கள் விவாதம் செய்யமாட்டார்கள். எது பேசினாலும் அதில் தனக்குத் தெரிந்த விஷயத்தை நுழைத்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். பேசத் துவங்கிய விஷயத்துக்கும், இவர்கள் சொல்வதற்கும் சம்பந்தமில்லை என்று சுட்டிக்காட்டினால் ’நல்லது சொல்கிறேன் கேட்டுக் கொள்’ என்று உயரத்தில் அமர்ந்து உபதேசிக்கும் நிலையைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வார்கள்.

Tuesday 28 May 2013

ச்சீ...மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

கடலூரில் 18.5.2013 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு, தனி நாடு போராட்டம் வெற்றி பெரும். நீங்கள் தனித்து விடப்பட்டதாக எண்ண வேண்டாம். உங்களுடன் நான் இருக்கிறேன். நான் சிறு வயதிலேயே ஆயுதம் ஏந்தி போராடினேன் என்று வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகப் பேசினார். இதற்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் தேசியச் சிந்தனையுள்ள அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஒரு வழக்கும் கடலூரில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் தேசத்துக்கு எதிராக போர் தொடுப்பது போன்ற பிரிவுகள் இடம் பெறவில்லை. ஒரு கண் துடைப்பு வழக்காகவே அது தெரிகிறது.

Monday 27 May 2013

பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு

நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சென்னை அசோக் நகர் ஆஞ்சனேயர் கோவிலில் பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடை பெற்றது. சொற்பொழிவாற்றியவர் தமிழாகரர். பேராசிரியர். முனைவர். சாமி.தியாகராசன் அவர்கள். இவர் மூவர் முதலிகள் முற்றம், திராவிடச் சான்றோர் பேரவை ஆகியவற்றின் நிறுவனரும் தலைவரும் ஆவார். பெரிய புராணம் ஒரு வாழ்வியல் என்பதை நிறுவும் ஆய்வு, பக்தி, மொழி, ஆகியவை கலந்த ஒரு உன்னதப் பேருரைத் தொடர் ஒன்றை 14 நாட்களுக்கு நிகழ்த்தினார் அவர்.


வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகிய அடிப்படைகளில் துவக்கி, தொண்டு என்பது குறித்த தெளிவான விளக்கத்துடன் வேகமெடுத்தது சொற்பொழிவுத் தொடர். சிவ பெருமானின் பெருமைகள், பெரிய புராணத்தின் தோற்றம், தடுத்தாட்கொண்ட தன்மை ஆகியன குறித்து விரிவாக உரையாற்றினார் பேராசிரியர்.

 நிகழ்ச்சியின் துவக்க நாளன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பெரியவர் வேதாந்தம்ஜி அவர்கள் வந்திருந்து சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தார்.


இது முற்றிலும் ஆன்மீகம் சார்ந்த சொற்பொழிவாக இல்லை. சமீபகாலமாக தமிழ் என்பது இறையியலுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பது போல திராவிட அரசியல் வட்டத்தைச் சேர்ந்தோர் செய்து வரும் விஷமப் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி தரும் வகையிலும் பல விஷயங்களைச் சொல்லி வந்தார். சத்து சிறிதுமற்ற சில்மிஷக் கேள்விகளுக்குச் சிரிப்புடன் ஓங்கியறையும் பதில்கள் பல இவரது பேச்சில் விரவிக் கிடக்கின்றன.


கேளாரும் வேட்ப மொழிந்த பேராசிரியரின் பேச்சு எக்காலத்திலும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தார்  இந்தத் தொடர் சொற் பொழிவை ஒலிக்கோப்புகளாகத் தங்களின் இணைய தளத்திலே இட்டு வைத்த்திருக்கிறார்கள்.


தமிழ் அன்பர்களும் தேசிய ஆர்வலர்களும் கேட்டுப் பயன் பெற்று மகிழுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. மேலும் மாதந்தோறும் ஐந்து நாட்கள் இவரது பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. காரணாம் 14 நாட்களில் சொல்லி முடிக்கப்படுமளவு சிறிய  விஷயமல்ல பெரிய புராணம்.

Friday 24 May 2013

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


யார் போற்றப்பட வேண்டும்?

யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?

தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்! 
பெருமையும் உரனும் ஆடூஉ மேன

அச்சமும் மடனும் நாணும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

(தொல்காப்பியம்)

ஆடவரின் பெருமையையும், உரத்தன்மையையும், பெண்டிரின் அச்சம், மடம், நாணம் ஆகியவையும் புகழப்பட வேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த தமிழ் மரபு.அப்படிப் புகழப்பட வேண்டிய ஆடவர் யார்? 


Friday 17 May 2013

அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..!


அழியும் நிலையில் 13 தலைமுறைக்கு முந்தய சிவன் கோவில் ..! செய்தியை பகிர்ந்து கொண்டு தடுக்க முயல்வோம் வாருங்கள் நண்பர்களே ...!

தேசிய நெடுஞ்சாலை துறையில் நான்கு வழி பாதை திட்டத்தினால், 1300 வருட சிவன் கோவில் அபாயத்தில் உள்ளதாக முகப்புத்தக நண்பர்கள்  எழுதியுள்ளார். பகிர்வையும் தினமலர் சுட்டியையும் படித்த போத இதை நடக்க விடக்கூடாது என்ற வைராக்யம் தோன்றுகிறது.

Saturday 11 May 2013

காங்கிரசுக்கு 121ஐ அன்பளித்த 371(J)வும் பாஜகவும்

கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவைப் பொறுத்தவரை சற்றே எதிர்பார்த்த வகையில் வந்துள்ளன. விவரமறிந்த சங்க வட்டாரத்தினர் 30 முதல் 40 தேறினால் பார்க்கலாம் என்றே சொல்லி வந்தனர். ஆனால் தொங்கு சட்டமன்றம் போல யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை வரும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து நோக்கினால் எடியூரப்பா பிரித்த ஒட்டுக்களின் எண்ணிக்கையே வீழ்ச்சிக்கு வழிகோலியது என்பது புலனாகும். 

Wednesday 8 May 2013

கர்நாடக தேர்தல் முடிவுகள் - ஒரு சாமானியனின் பார்வை.

கர்நாடகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. காங்கிரசுக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பாஜக இரண்டாமிடத்துக்குக் கடுமையாகப் போராடுகிறது. ஏன் இந்த நிலை? குஜராத்தில் நடப்பது, மத்தியப் பிரதேசத்தில் நடப்பது தெற்கே நடப்பதில்லையே ஏன்? ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் இவ்வளவு பாதிப்பைத் தரும்போது ஆட்சி எந்த அளவுக்கு மக்களைப் பாதித்தது என்றும் பார்க்கவேண்டும்.