ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 13 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 4

ரிக் வேதத்தில் இருந்து எதை எடுத்து குறிப்பிட்டார்கள் ? ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட, இந்திரனுக்கும் தசயுக்களுக்கும் நடந்த போரை இவர்கள், ஆரியர்களுக்கும், திராவிடகளுக்கும் நடந்த இணச்சண்டை என்று திரித்து விட்டனர். இந்திரன் வெண்ணிற தோல் உடையவன் என்பதாலும், தசயுக்கள் கரிய நிறம் கொண்டவர்கள் என்பதாலும் அதை இவர்களின் மத வியாபாரத்திற்கு உபயோகித்துக் கொண்டனர்.


ஆனால் அதே ரிக் வேதத்தில், இந்தியா என்பது பல இன‌ங்கள் வாழும் நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "நாங்கள் இந்திரனை வணங்குகிறோம், எங்கள் வணக்கத்துக்கு உரிய இந்திரன், தசயுக்களை ஆரியனாக மாற்றட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஆரியன் என்பது பிறப்பை சார்ந்து வரும் ஒரு இனமல்ல என்றும் தெளிவாகிறது.
ஆனால் இந்த வியாபாரிகளுக்கு தங்கள் மதத்தை விற்பதற்கு தேவையான வரிகளும், வார்த்தைகளும் மட்டுமே அவசியமல்லவா ?

ஆரியன் என்கிற வார்தை, புனிதமானவன் மற்றும் தூயமையானவன் என்பதை குறிக்கும். ஆனால், ஆரியன் என்கிற வார்த்தையை முதல் முதலாய் "மேக்ஸ் முள்ளர்" என்பவர் 1853 ஆம் ஆண்டு ஒரு இனத்தை குறிக்கும் வார்த்தையாக இந்த ஆரிய படையெடுப்பை குறித்து எழுதிய கட்டுரையில் உபயோகித்தார். 1888 ஆம் ஆண்டு அறிஞர்களும், சரித்திர ஆய்வாளர்களும் இதை மறுத்தளித்த போது, மாக்ஸ் முள்ளர் தன்னுடைய பெயர் நிலைக்கொலைவதை கண்டு இவ்வாறு சொன்னார். "நான் ஆரியன் எனப்தை ஒரு ரத்தமாகவோ, எலும்பாகவோ, முடியாகவோ அல்லது மண்டை ஓடாகவோ குறிப்பிடவில்லை மாறாக ஆரிய மொழியை பேசுவபர்களையே அவ்வாறு குறிப்பிடுகிறேன். ஆரியன் என்பதை இனமாக, ரத்தமாக, முடியாக, கண்களாக என நினப்பவர்கள் பெரும் பாவம் செய்கிறார்கள்" என்று பல்டி அடித்தார்.

["I have declared again and again that if I say Aryas, I mean neither blood nor bones, nor hair, nor skull; I mean simply those who speak an Aryan language...to me an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar. (Max Mueller, Biographies of Words and the Home of the Aryas, 1888, pg 120) ]

ஆனால் அவர் உருவாக்கிய அந்த நஞ்சு ஏற்கனவே விதைக்க பட்டுவிட்டது. ஐரோப்பாவில் பலர் ஆரியத்தை ஒரு இனமாக பாவித்தார்கள். ஹிட்லரும் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்டார். அன்று தொடங்கிய அந்த நஞ்சு இன்றைய இந்திய அரசியல்வாதிகளின் (குறிப்பாக தமிழர்களின்) பிரிவினைவாத பிரசாரங்களுக்கும் அவர்கள் அரியனை ஏறுவதற்கும் மிகவும் பயன்பட்டது.

இப்படி பலவிதத்தில் தங்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகவும், இந்திய திருநாட்டை பிளப்பதற்காகவும், ஏற்கனவே இந்தியா அந்நிய சக்திகளால் ஆளப்பட்டதாகவும், பல விதங்களில் ஆதாரங்கள் என்கிற பெயரில் அர்த்தமில்லாத கூற்றுகளை சில விஞ்ஞான விளக்கங்களோடு அவர்கள் முன்வைத்தார்கள். இப்படி தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது.

நவீன இந்தியா வளரத் தொடங்கியதும், தர்மம் மீண்டும் வெல்லத் தொடங்கியது. 20ம் நூற்றாண்டில் பல இந்தியர்கள் இந்த ஆரிய படையெடுப்பு எனும் கிறிஸ்துவ மத வியாபார உக்தியை புரிந்துக் கொண்டு, அதை பற்றி ஆழமாய் ஆராயத் தொடங்கினர். குறிப்பாக பால கங்காதர திலகர், ஔரொபிந்தர், மற்றும் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோரின் பங்களிப்பு இதில் மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த சித்தாந்தத்தை உடைத்தும், உரித்தும் போட்டார்கள். ஆரியர்கள் வெளியில் இருந்த வந்தவர்கள் என்றால் இந்தியாவுக்கு வெளியே அவர்கள் ஏன் எந்த நகரத்தையும் புனித‌ நகரமாக குறிப்பிடவில்லை ? மேலும் இந்தியாவையும், இந்தியாவில உள்ள பல இடங்களையும் மட்டுமே அவர்கள் ஏன் புனித தளங்களாக குறிப்பிட்டார்கள் ? என்று கேட்டார்கள். இதுவரை அதற்கு யாரும் பதில் தரவில்லை. இருந்தால்தானே தருவார்கள்.

அதைப்போலவே அகழ்வாராய்ச்சி துறையில் பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் நிஜ சரித்திரத்தை, இந்தியர்களின் முன் நிறுத்திய "எஸ் ஆர் ராவின்" பங்களிப்பும், மற்ற விஞ்ஞானிகள் மற்றும் மேதைகளின் ப‌ங்களிப்பும், இந்த ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை தவிடு பொடியாக்கியதில் முக்கிய பங்காற்றின.

முதலில் இவர்கள் கிடைத்த எலும்புகூடுகளை வைத்து ஆரிய, திராவிட இனப்போர் என்று முடிவெடுத்ததை பார்ப்போம். அமேரிக்காவின் பெர்கில்லி பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் "ஜி எப் டேல்ஸ்", தன்னுடைய "The Mythical Massacre at Mohenjo-daro', என்கிற புத்தகத்தில் இந்த கூற்றை உடைத்து எறிகிறார். ஆரியர்களை திராவிட இனப்படுகொலை செய்ததாய் சொல்லப்பட்ட அந்த சிந்து சமவெளி ஆதாரத்தை அக்கு வேர் ஆணியாக பிய்த்து எறிகிறார். "ஒன்பது வருடமாய் (1922-31) மிகத் தீவிரமாக‌ ஆராய்ந்து பார்த்த பின்னும், இவர்களுக்கு 37 எலும்பு கூடுகளே கிடைத்துள்ளன. அவைகளும் சாதாரண‌மான சாவுகளையே குறிக்கின்றன. அவைகளில் எந்த வித தாக்குதலுக்கு உண்டான அறிகுறியும் தென்படவில்லை. மேலும் இந்த உடல்கள் கிடைத்த அந்த மூன்று கிலோமீட்டர சுற்றளவில் ஒரு போர் நடந்ததற்கான எந்த தடையமும் இல்லை. வாள்களோ, ஈட்டிகளோ, உடைந்த தேர்களோ என்று எதுவுமே இல்லை எதை வைத்துக்கொண்டு இப்படி ஒரு போர் நடந்தது என்று பிதற்றுகிறார்கள்" என்று கேட்கிறார்.

இயற்கை சாவுகளை இந்த மத வியாபாரிகள் இனச்சண்டை என்று எப்படி திரித்தார்கள் பாருங்கள்.

அடுத்து ஆங்கிலேய மதவியாபாரிகள் முக்கியமாக வைத்த ஒரு கருத்து என்னவென்றால், ஆரியர்கள் அந்த காலத்திலேயே குதிரைகள் மேலும், குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களிலும் வந்து சண்டையிடும் வல்லமையை வைத்திருந்தார்கள். இங்கு இருந்த (அதாவது திராவிடர்கள்) அந்த ஆற்றல் இல்லாததால், தங்கள் நவீன யுத்த முறைகளால் அவர்கள் சிறு குழுக்களாய் இந்தியாவில் இருந்த திராவிடர்களை அடித்து தெற்கு பக்கம் விரட்டி, வட இந்தியாவை பிடித்துக் கொண்டனர் என்றார்கள். இதை மேலும் பலமாக்க, சிந்து சமவெளியிலோ, ஹரப்பாவிலோ கிடைத்த ஆதாரங்களின் படி, குதிரைகளை இந்தியாவில் அக்காலத்தில் உபயோகித்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறினர். குதிரைகள் பழக்க பட்டதற்கோ, குதிரை கட்டிய தேர்கள் உபயோகப்பட்டதற்கோ சான்றுகளும் கி.மு. 1500 ஆண்டுக்கு முன் இல்லை என்றும் முன்மொழிந்தார்கள். ஆகையால் ஆரியர்களே குதிரைகளோடு கைபர் கணவாய் வழியே வந்து இந்தியாவில் இருந்த திராவிடர்களை அடித்து விரட்டினார்கள் என்று அடித்து விட்டார்கள்.

ஆனால் சமீபகால எஸ் ஆர் ராவ் அவர்களின் அகழ்வாராய்சியின் மூலமாக ஹரப்பாவிலும், மொஹஞ்ச தாராவிலும் நிறைய குதிரை எலும்புகளை கண்டுபிடித்தனர். (அதாவது இவர்களின் கூற்றுப்படி ஆரிய வருகைக்கு முன் இருந்த நாகரீகம்) குதிரைகளின் வரைப்படங்களும், கலிமண் சிற்பங்களும் கிடைத்தன. (படம் பார்க்க) இது இவர்களின் கூற்றை சுக்கு நூறாக்கின. இந்தியா விழிப்படைய தொடங்கியதும், வெள்ளையனின் கிறிஸ்துவ நரிமுகத்தின் முகமுடி கிழிய தொடங்கியது.

No comments: