ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 14 January 2011

சொம்பு அடிப்பதில் உள்ள சிக்கல்

நான் முன்பு வேலை செய்த கம்பெனியில் ஒருவன் எங்கள் அணியில் வேலை செய்தான். சொம்பு என்றால் அப்படி ஒரு சொம்படிப்பான். மேனேஜர் தம்மடிக்ப் போவார், கூடவே போய் அவருக்கும் வாங்கிக் கொடுத்து இவனும் தம்மடிப்பான். தேநீரும் அப்படியே. அந்த ஆண்டு ரிவ்யூ வந்தது. வழக்கம் போல இவனுக்கு நல்லதோர் சிபாரிசு செய்துவிட்டார் மேனேஜர். அது Program Manager இடம் இருக்கிறது என்றதும் ஒரு சிலுவையை வாங்கி கயிற்றில் கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொண்டான்.

என்னடா மாறிட்டியா என்றதற்கு "இல்லை மாமூ! PM கிறிஸ்தவர். அவர்கிட்ட final review போனால் நம்மளப் பார்த்ததுமே ஒரு ஒபீனியனுக்கு வருவாருல்ல" என்றான். அட நாதாரி! என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.

நாங்கள் வேலை செய்தது Inbound Call Center. வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வது வேலை. கணினி வேலை செய்யாதது முதல், upgrade, virus உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் அழைப்பார்கள்.

ரிவ்யூவுக்கு இரண்டு வாரங்கள் முன்பிருந்தே இவன் 7 நாட்களும் அலுவலகம் வருவான். தேவையோ இல்லையோ வாடிக்கையாளர்களை அழைத்துப் பேசுவான். கேட்டால் follow up என்பான். தங்கியிருந்த மேன்ஷனில் பலர் CA படிக்கும் மாணவர்கள். அவர்களுக்கு call center பற்றிப் புரியாத போதும் நான் என்னென்ன செய்தேன் தெரியுமா என்று பேசுவான். எங்க PM ரெம்ப நல்லவரு, வல்லவரு என்பான். இங்க வந்தும் ஏண்டா என்றால், நம்ம ஆபீஸ்காரன் 3 பேர் இருக்கிங்கள்ல என்பான்.

ஃபைனல் ரிவ்யூ வருவதற்குள் இவனை வேறு துறைக்கு மாற்றிவிட்டர்கள். "இப்ப மஞ்சமாக்கான் (அவனுக்கு வைத்த பட்டப் பெயர்) யாருக்கு சொம்படிப்பான்" என்று நாங்கள் ஆர்வத்துடனிருக்க அவன் எங்கள் மேனேஜர், PM எல்லோரையும் விட்டுவிட்டு புது மேனேஜர், PMக்கு சொம்படிக்க ஆரம்பித்தான். பழைய மேனேஜர், PMஐ மட்டம் தட்டிப் பேசுவதும் அடிக்கடி நடந்தது.

என்னிடமே வந்து உங்க PMக்கு எதுவும் தெரியாது. எங்காளு சூப்பர் மேன் என்றான். ஒரே வாரத்தில் இவன் வேலையில் மகிழ்ந்து போய் ப்ரமோஷன் கொடுக்க எழுதிவிட்டாராம் அந்த PM. அடிக்கடி அவர் கூடவே சுற்றினான். வேலை நேரம் முடிந்தும் அவர் இருக்கும் வரை ஆபீஸில் இருப்பான். அவர் வீட்டுக்குப் போகக் கார் ஏறும் போது கதவு திறந்து மூடி விட்டு பிறகு இவன் போவான்.

சரி, பயலுக்கு ப்ரமோஷன் உறுதி என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம். சொம்படிக்கிறவனுக்குத்தான் மாப்ள காலம் என்று புலம்பித் தீர்த்தோம். நான் நேரே மயிலை கபாலி கோவிலுக்குப் போய் எங்க ஊர் மகாராஜா (சுந்தரேஸ்வரர்) சந்நிதிக்குச் சென்றேன். அவன் எப்படியோ போகட்டும். "நான் உழைச்சதுக்கு சம்பள உயர்வாவது வரவேண்டும் அரசே!" என்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தேன்.போதையில் ஒரு வடசென்னைக்கரன் "ங்... அந்தத் .... பையனுக்கு ஸ்கெட்சு போட்ற சொல்றேன் மாமா." என்று கொந்தளித்தான். 

ஒரு மாதத்தில் ரிவ்யூ முடிவுகள் வந்தன. ப்ரமோஷன் லிஸ்டில் சொம்பன் பெயர் இல்லை. HR காரர்களிடம் சண்டை போட்டான். அவர்கள் உன் துறையிலிருந்து வந்தால் நாங்கள் ஏன் நிறுத்துகிறோம் என்றனர். அவனுடைய PM இடம் கேட்டான். அவர் 3 வார reports காட்டி "Your performance is not upto the mark, buddy" என்று சொல்லிவிட்டார். எங்கள் PMஇடம் வந்து பேசினான். நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று இவர் சொல்லிவிட்டார்.

எதிர்பார்த்த மற்றவர் பெயர்களில் நான் உள்பட 6 பேர் பெயர்கள் இல்லை. ஆனால் எங்களுக்கு கணிசமான சம்பள உயர்வு தந்திருந்தார்கள். ப்ரமோஷன் வரவில்லை என்று வருந்தி என் தந்தையிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, ஊரெல்லாம் ப்ரமோஷன் ப்ரமோஷன்னு தண்டோரா போட்டவனுக்கு வரலை. அதை விட உனக்கு வராதது பெரிய கேவலமில்லை. வேலையைப் பார் என்று சொல்லிவிட்டார்.

ஒன்று புரிந்தது. சொம்படிப்பது சாதாரண வேலையில்லை. அதற்கு மிகுந்த சாமர்த்தியம் வேண்டும. இல்லையென்றால் நம் சொம்பன் மாதிரி கிடக்கவேண்டியது தான்.

இந்த நினைவை அசைபோடும் போது வந்த கேள்விகள்:

  1. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பலர் பேசும் போது சொம்பு அடிவாங்கும் சத்தம் கேட்கிறதே. அவர்களெல்லாம் அதிபுத்திசாலிகளா?
  2. ஆட்சி மாறினால் இந்தப் பாராட்டுவிழா மக்கள் கருணாநிதியுடனேயே இருப்பார்களா?

No comments: